/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடு சாலையில் நிறுத்தப்படும் கரும்பு டிராக்டர்கள்
/
திருவாலங்காடு சாலையில் நிறுத்தப்படும் கரும்பு டிராக்டர்கள்
திருவாலங்காடு சாலையில் நிறுத்தப்படும் கரும்பு டிராக்டர்கள்
திருவாலங்காடு சாலையில் நிறுத்தப்படும் கரும்பு டிராக்டர்கள்
ADDED : டிச 19, 2024 12:29 AM

திருவாலங்காடு:திருவாலங்காடில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு, திருத்தணி, ஆர்.கே.பேட்டை, அரக்கோணம் உட்பட ஏழு கரும்பு கோட்டங்களில் இருந்து டிராக்டர், லாரி வாயிலாக கரும்புகள் வரவழைக்கப்பட்டு அரவை செய்யப்படுகின்றன.
தினமும், 18 லட்சம் கிலோ கரும்பு அரவை செய்யப்படும் நிலையில், 100க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் வாயிலாக கரும்பு வரவழைக்கப்படும்.
தற்போது கரும்பு ஏற்றி வந்த, 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் கரும்பு லோடுடன் ஆலை வளாகத்திலும், 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
கனகம்மாசத்திரம் -- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில் இருபுறமும் கரும்பு ஏற்றி வந்த வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து நிகழுமோ என, அச்சமடைந்துள்ளனர்.
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் மட்டும் கரும்பு ஏற்றி வரும் வாகனங்கள் நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.