ADDED : நவ 02, 2024 08:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:ஒடிசா மாநிலம் பாலங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் பாரியா, 38. ஆரணி அடுத்த போந்தவாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில் வசித்தபடி வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம், இவர் வசிக்கும் அறையில், காய்கறி நறுக்க பயன்படுத்தப்படும் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒடிசாவில் உள்ள மனைவியுடன் மொபைல்போனில் பேசிய போது தகராறு ஏற்பட்டு, தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆரணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.