/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளி மாணவர்களுக்கு கோடைக்கால விளையாட்டு
/
பள்ளி மாணவர்களுக்கு கோடைக்கால விளையாட்டு
ADDED : மே 18, 2025 03:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:பள்ளி மாணவ - மாணவியருக்கு கோடைக்கால விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
திருவள்ளூர் மாவட்ட இந்திய பவுத்த மகா சங்கம் சார்பில், பள்ளி மாணவ - மாணவியருக்கான கோடைக்கால விளையாட்டு போட்டிகள், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்றுநடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
அவர்களுக்கு 100 மீட்டர்ஓட்டம், நீளம் தாண்டுதல்மற்றும் வாலிபால்போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.