ADDED : ஏப் 06, 2026 04:55 PM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டையில் காலை பெய்த கோடை மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோடை காலம் துவங்கிய நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. மதிய நேரங்களில் வெயில் உச்சம் அடைந்து வாட்டி எடுத்தது. கத்திரி வெயில் துவங்கும் முன்னரே, வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்ததால், மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கினர். பகல் நேரங்களில் கனரக வாகன ஓட்டிகள் ஓய்வெடுத்து, இரவு நேர பயணத்தை மேற்கொண்டனர். சில தினங்களுக்கு முன் திருத்தணி, ஆர்.கே.பேட்டை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் கோடை மழை பெய்து, மக்களை குளிர்வித்தது.
அதே போல், காலை ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. ஒரு மணி நேரம் நீடித்த மழையால், சாலையின் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி குளமானது. கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு மழைநீருடன், கழிவுநீர் சேர்ந்து சாலையில் தேங்கியது. திடீரென மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
