ADDED : மார் 27, 2025 08:40 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கில், கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் வரும் 1ம் தேதி துவங்குகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்ள நீச்சல் குளம் பொதுமக்கள், நீச்சல் வீரர்களின் தினசரி பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நீச்சல் குளத்தில், நீச்சல் கற்றுக்கொள்ளும் திட்டத்தின் கீழ் பயிற்சி முகாம் வரும் ஏப்.1ம் தேதி முதல் துவங்குகிறது.
ஒவ்வொரு முகாமும், 12 நாட்கள் நடைபெறும். பயிற்சி கட்டணம் 1,770 ரூபாய். முகாமில் கலந்து கொண்டு நிறைவு செய்வோருக்கு, சான்றிதழ் வழங்கப்படும். நீச்சல் பயிற்சியில் சேர விருப்பம் உள்ளோர் மாவட்ட விளையாட்டு அலுவலர் 74017 03482, நீச்சல் பயிற்றுநர் 96297 95782, 79044 88923 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.