/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆந்திர மாநில எல்லையில் கண்காணிப்பு அவசியம்
/
ஆந்திர மாநில எல்லையில் கண்காணிப்பு அவசியம்
ADDED : மார் 17, 2025 01:37 AM

பள்ளிப்பட்டு:திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகரில் ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்திற்கு நெல்வாய், கார்வேட்நகரம், நகரி ஆகிய மூன்று மார்க்கமாக சாலை வசதி உள்ளது. இதுதவிர, வெங்கம்பேட்டை வழியாக காட்டுவழி சாலையும் உள்ளது.
இதில், தமிழக எல்லைப்பகுதி வரை மட்டுமே குறுகலான சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. 2 கி.மீ., தொலைவில் ஆந்திர மாநில பகுதியில், இருவழி சாலையாக அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளிப்பட்டில் இருந்து நகரி வழியாக புத்துார் செல்வதைவிட, வெங்கம்பேட்டை வழியாக செல்லும் பாதை விரைவு பாதையாக அமைந்துள்ளது.
இதனால் இரவு, பகல் என, எந்நேரமும் வாகனங்கள் இந்த மார்க்கமாக பயணித்து வருகின்றன. ஆந்திர மாநிலம், நகரி அடுத்த ஓஜிகுப்பம் பகுதியில் இருந்து, தமிழகத்தின் பொன்பாடி வழியாக கடத்தப்படும் கஞ்சா, மதுவிலக்கு அமலாக்க போலீசாரால் அவ்வப்போது பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
பிரதான தேசிய சாலையான பொன்பாடி வழியாக கடத்தப்படும் போதை பொருட்கள் அதிகளவில் பிடிபடும் நிலையில், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் குறுக்கு பாதையான வெங்கம்பேட்டை மார்க்கத்தில், போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.