/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பின்றி சிந்தலகுப்பம் பூங்கா
/
பராமரிப்பின்றி சிந்தலகுப்பம் பூங்கா
ADDED : பிப் 19, 2025 01:38 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ஒன்றியம், சித்தராஜகண்டிகை ஊராட்சிக்கு உட்பட்டது சிந்தலகுப்பம் கிராமம். அங்கு ஏராளமான குடியிருப்பு பகுதிகள் உள்ளன. குடியிருப்புவாசிகளின் கோரிக்கையை ஏற்று, 2021 - -22ம் நிதி ஆண்டில், சிந்தலகுப்பம் கிராமத்தில், 4 லட்சம் ரூபாய் செலவில், பூங்காவும் அதற்கான வேலியும், பூங்காவிற்குள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதையும் அமைக்கப்பட்டது.
அந்த பூங்கா முழுதும் பராமரிப்பின்றி உள்ளதால், கிராம மக்கள் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சித்தராஜகண்டிகை ஊராட்சி நிர்வாகம், பூங்காவில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு, இனி வரும் காலங்களில், முறையாக பராமரிக்க வேண்டும்.
மேலும் பூங்காவில் சிறுவர் - சிறுமியர் விளையாடி மகிழ, சரக்கு மரம், ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அமைக்க வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

