/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளி ஆசிரியருக்கு 'தமிழ் வேந்தர்' விருது
/
அரசு பள்ளி ஆசிரியருக்கு 'தமிழ் வேந்தர்' விருது
ADDED : நவ 10, 2025 10:59 PM

திருத்தணி: திருத்தணி அரசு துவக்கப் பள்ளி ஆசிரியருக்கு, தமிழ்வேந்தர் விருது வழங்கப்பட்டது.
கம்பன் கழகத்தின், 10ம் ஆண்டு விழாவையொட்டி, தமிழகம் முழுதும் இருந்து தமிழ் தொண்டு ஆற்றியோர், கல்விச் சேவை புரிந்தோர் மற்றும் பல்வேறு கலைத் திறன்களில் சாதனை படைத்து வரும் மாணவர்கள் என, பலநிலை ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில், திருத்தணி சுப்ரமணியபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் மாசிலாமணி, திருக்குறள் பணியையும், தமிழ் தொண்டையும் பாராட்டி பெருமைப்படுத்தும் வகையில் கட்டுரைகள் எழுதினார்.
இதையடுத்து, ஏலகிரி பாரதி தமிழ்ச் சங்க தலைவர் சிவராஜி, கிருஷ்ணகிரி கம்பன் கழக தலைவர் ரவிந்தர், அருள், ஸ்ரீரங்கன், பாலாஜி, பன்னீர்செல்வம் ஆகியோர், மாசிலாமணிக்கு தமிழ்வேந்தர் விருது வழங்கி பாராட்டினர். ஆசிரியர் மாசிலாமணி, 'தினமலர்' நாளிதழ் சார்பில் நல்லாசிரியர் விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

