/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தமிழக டி.ஜி.பி., நெமிலி கோவிலில் தரிசனம்
/
தமிழக டி.ஜி.பி., நெமிலி கோவிலில் தரிசனம்
ADDED : ஜூலை 24, 2025 02:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி., சங்கர் ஜிவால். நேற்று மதியம் குடும்பத்துடன். திருத்தணி அடுத்த நெமிலி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைகுண்ட பெருமாள் கோவிலுக்கு வந்தார்.
பின், மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.
அங்கிருந்து புறப்பட்டு சென்று, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார். பின், மாலை 4:30 மணியளவில், குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்.