/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிநீர் குழாய் பதிக்க தார் சாலை சேதம்
/
குடிநீர் குழாய் பதிக்க தார் சாலை சேதம்
ADDED : ஜன 19, 2025 02:21 AM

பள்ளிப்பட்டு,:பள்ளிப்பட்டில் இருந்து, சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அத்திமாஞ்சேரிபேட்டை. இந்த சாலையில் பஜார் பகுதியும் அமைந்துள்ளது. பஜார் பகுதியில் செயல்பட்டு வரும் கடைகளால், சாலையின் அகலம் குறைந்துள்ளது. சாலையோர கடைகளும், வாகனங்களாலும் பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அத்திமாஞ்சேரிபேட்டை பஜார் பகுதியில் குடிநீர் குழாய் புதைக்கும் பணிக்காக, 10 நாட்களுக்கு முன் தார் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. குழாய் உடனடியாக ஒரே நாளில் புதைக்கப்பட்டு பணி நிறைவடைந்தது.
ஆனால், பள்ளம் தோண்டியதில் சேதமடைந்த தார் சாலை தான் மீண்டும் சீரமைக்கப்படாமல் ஜல்லிகற்களால் சீரழிந்து கிடக்கிறது. இதனால் வாகனஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சேதமடைந்துள்ள தார் சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.