/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 06, 2025 06:24 AM
திருவள்ளூர்: காலி மது பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தை கைவிடக் கோரி, டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மது பாட்டில்களை, பொது இடங்களில் வீசப்படுவதை தடுக்கும் பொருட்டு, காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் அமல்படுத்தி உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில், நேற்று திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிர்வாகிகள் பேசியதாவது:
காலி மது பாட்டில்களை திரும்ப பெறுவதால் பணியாளர்களுக்கு தொற்று நோய் ஏற்படுகிறது. பணி சுமை அதிகமாகி, மன உளைச்சல் ஏற்பட்டு வருகிறது. எனவே, காலி மது பாட்டில்களை, திரும்ப பெறுவதற்கு தனியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு வலியுறுத்தி பேசினர்.

