ADDED : மே 23, 2026 04:40 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதியில் டாஸ்மாக் ஊழியர்கள் மீது, காவல் துறையினர் பொய்யான வழக்கு பதிவு செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே, திருவள்ளூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட டாஸ்மாக் கூட்டுக்குழு சங்கங்கள் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, இ.கம்யூ., மாவட்ட தலைவர் நாராயணராஜு தலைமையில், 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், 'தனிநபர் ஒருவருக்கு இரண்டு பாட்டிலுக்கு மேல் விற்பனை செய்தால் வழக்கு பதிவு செய்வோம்' என, காவல் துறையினர் மிரட்டி வருவதை நிறுத்த வேண்டும்.
கடை நேரம் முடிந்தவுடன் விற்பனை, கணக்கு, பில் சரிபார்ப்பு மற்றும் பணத்தை பாதுகாப்பாக வைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள குறைந்தது, 30 - 90 நிமிடம் வரை ஆகும் நிலையில், இரவு 10:00 மணிக்கு மேல் கடைகளை மூட வேண்டும் என, காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
