/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிலாளர்களை குறி வைத்து நடத்தப்படும் டாஸ்மாக் கடைகள்
/
தொழிலாளர்களை குறி வைத்து நடத்தப்படும் டாஸ்மாக் கடைகள்
தொழிலாளர்களை குறி வைத்து நடத்தப்படும் டாஸ்மாக் கடைகள்
தொழிலாளர்களை குறி வைத்து நடத்தப்படும் டாஸ்மாக் கடைகள்
ADDED : நவ 02, 2024 06:30 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பெரும்பாலான தொழிற்சாலைகள், 24 மணி நேரமும் இயங்குவதால், இரவு - பகல் என பாராமல், எப்போதும் தொழிலாளர்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும்.
இந்த தொழிற்சாலை வளாகத்தில் உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரதான சாலைகளில், தனியாருக்கு சொந்தமான இடங்களில், மூன்று அரசு டாஸ்மாக் கடைகள் (எண்: 9105, 9191, 9138) இயங்கி வருகின்றனர்.
தொழிலாளர்களை மட்டுமே குறி வைத்து, இந்த மூன்று டாஸ்மாக் கடைகளும் நடத்தப்படுவதால், எப்போதும் திருவிழா போல் தொழிலாளர்கள் கூட்டம் நிரப்பி வழியும்.
தொழிலாளர்கள் சாம்பாதிக்கும் பணத்தை அரசு டாஸ்மாக் கடைகளில் இழப்பது ஒருபுறம் இருக்க, பல தொழிலாளர்கள் மது குடித்துவிட்டு, வேலைக்கு செல்லும் ஆபத்தான நிலை தொடர்கிறது.
இதனால், தொழிலாளர்கள் விபத்து, உற்பத்தி பாதிப்பு போன்ற இக்கட்டான சூழல்நிலைக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினர் தள்ளப்படுகின்றனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி, இந்த மூன்று அரசு மதுக்கடைகளையும் மூட வேண்டும் என, பல ஆண்டுகளாக சிப்காட் உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே, தொழில் வளர்ச்சி மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி, உடனடியாக மூன்று டாஸ்மாக் கடைகளையும் மூட திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.