தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தொழிலாளர்களை குறி வைத்து இயங்கும் 'டாஸ்மாக்' கடைகள்

தொழிலாளர்களை குறி வைத்து இயங்கும் 'டாஸ்மாக்' கடைகள்

தொழிலாளர்களை குறி வைத்து இயங்கும் 'டாஸ்மாக்' கடைகள்


ADDED : ஏப் 20, 2025 07:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2025 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அனைத்து தொழிற்சாலைகளும், 24 மணி நேரமும் இயங்குவதால், இரவு - பகல் என, எப்போதும் தொழிலாளர்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும்.

இந்த தொழிற்சாலை வளாகத்தில் உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரதான சாலைகளில், தனியாருக்கு சொந்தமான இடங்களில், மூன்று டாஸ்மாக் கடைகள் (எண்: 9105, 9191, 9138) இயங்கி வருகின்றன.

தொழிலாளர்களை மட்டுமே குறி வைத்து, இந்த மூன்று டாஸ்மாக் கடைகளும் இயங்குவதால், எப்போதும் திருவிழா போல் தொழிலாளர்கள் கூட்டம் நிரம்பி வழியும். தொழிலாளர்கள் சாம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக் கடைகளில் இழப்பது ஒருபுறம் இருக்க, பல தொழிலாளர்கள் மது அருந்திவிட்டு பணிக்கு செல்லும் ஆபத்தான நிலை தொடர்கிறது.

இதனால், தொழிற்சாலை விபத்தில் சிக்கும் தொழிலாளர்கள், உற்பத்தி பாதிப்பு போன்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினர் தள்ளப்படுகின்றனர்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி, மேற்கண்ட மூன்று டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என, பல ஆண்டுகளாக கும்மிடிப்பூண்டி சிப்காட் உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொழில் வளர்ச்சி மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி, உடனடியாக மூன்று டாஸ்மாக் கடைகளையும் மூட, கலெக்டர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, தொழிற்சாலை நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us