தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ‘டாஸ்மாக்’ கடைகளால் இடையூறு மாற்றிடத்தில் அமைக்க எதிர்பார்ப்பு

‘டாஸ்மாக்’ கடைகளால் இடையூறு மாற்றிடத்தில் அமைக்க எதிர்பார்ப்பு

‘டாஸ்மாக்’ கடைகளால் இடையூறு மாற்றிடத்தில் அமைக்க எதிர்பார்ப்பு


ADDED : செப் 06, 2026 08:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2026 08:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொன்னேரி, செப். 7–

பொன்னேரி நகரப் பகுதியில் உள்ள ‘டாஸ்மாக்’ கடைகளால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படும் நிலையில், அவற்றை மாற்று இடங்களில் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பொன்னேரி நகரத்தில், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், செங்குன்றம் சாலை ஆகிய இடங்களில், ‘டாஸ்மாக்’ கடைகள் செயல்படுகின்றன.

இவை, அதிக போக்குவரத்து உள்ள மாநில நெடுஞ்சாலைகளின் அருகிலும், பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் இருக்கின்றன.

மேற்கண்ட ‘டாஸ்மாக்’ கடைகளுக்கு வரும் ‘குடி’மகன்கள், மது அருந்திவிட்டு, சாலையோரங்களில் கூட்டம் கூட்டமாக நின்று அரட்டை அடிக்கின்றனர். இதனால், சாலையில் செல்லும் பெண்கள் அச்சத்திற்கு ஆளாகின்றனர்.

கடைக்கு வருவோர், அவர்களது வாகனங்களை நெடுஞ்சாலையில் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்திவைத்து, மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

மார்க்கெட், பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இவை செயல்படுவதால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி தவிக்கின்றனர்.

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, இவற்றை மாற்று இடங்களில் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us