/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாலியல் தொல்லை போலீசில் ஆசிரியை புகார்
/
பாலியல் தொல்லை போலீசில் ஆசிரியை புகார்
ADDED : பிப் 22, 2024 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம், அண்ணா நகரில் விடுதியில் தங்கி, திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் 22 வயது இளம்பெண். இவர், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், அண்ணா நகர் மேற்கு, பொன்னி காலனியில் உள்ள தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரியும் 52 வயது நபர் தொடர்ச்சியாக தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
சம்பவத்தின் உண்மை தன்மையை குறித்து, பள்ளியின் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரிக்கின்றனர்.