/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி
/
பைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி
ADDED : பிப் 20, 2025 09:38 PM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ள மஹா கால பைரவர் கோவிலில், நேற்று, தேய்பிறை அஷ்டமி விழா பூஜை நடந்தது.
காலை, மூலவர் கால பைரவருக்கு பால், தயிர், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதைத் தொடர்ந்து வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு, மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது.
பின், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல, தேவந்தவாக்கம் திரிபுரசுந்தரி சமேத தேவநாதீஸ்வரர் கோவிலில், கால பைரவர் சன்னிதியில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

