தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கால்நடை வளர்ப்பில் தொழில்நுட்ப பயிற்சி

 கால்நடை வளர்ப்பில் தொழில்நுட்ப பயிற்சி

 கால்நடை வளர்ப்பில் தொழில்நுட்ப பயிற்சி


ADDED : பிப் 28, 2026 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 05:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி: திருத்தணியில் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு, தொழில்நுட்பம் மற்றும் சமீபத்திய முன்னேற்றம் குறித்து, நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.

திருத்தணி ஒன்றியத்தில் மொத்தம் 27 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு, நவீன தொழில்நுட்பம் மற்றும் சமீபத்திய முன்னேற்றம் குறித்து, 100 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

நேற்று திருத்தணி கால்நடை பராமரிப்பு துறை சார்பில், ஒன்றிய அலுவலக வளாகத்தில், 100 விவசாயிகளுக்கு கால்நடைகள் எவ்வாறு வளர்ப்பது, எந்த தீவனம் வழங்கினால் கறவை மாடுகள் அதிகளவில் பால் சுரக்கும் போன்றவை குறித்து, கால்நடை உதவி மருத்துவர்கள், எத்திராஜ், திருநாவுக்கரசு மற்றும் உதயகுமார் ஆகியோர் விளக்கினர்.

மேலும், கால்நடைகளை தாக்கும் நோய்கள் மற்றும் அதற்கு எந்த முறையில் சிகிச்சை அளிப்பது குறித்தும் விவசாயிகளுக்கு மருத்துவர்கள் விளக்கினர். பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு, சோளம் விதை, அடியுரம், தாது உப்பு கலவை பாக்கெட், பயிற்சி கையேடு மற்றும் பயண கட்டணமாக, 150 ரூபாய் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us