நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி செந்தமிழ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ் மனைவி ஆஷா, 28. இவர், ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்துள்ளார். நிதி நிறுவன அதிபர்களும், ஏஜன்ட்களும் ஓராண்டாக தலைமறைவாக உள்ளனர்.
நிதி நிறுவனம் குறித்து, சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தும் இதுவரை எந்த தகவலும் இல்லாததால், ஆஷா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலையில் வீட்டில் தனியாக இருந்த ஆஷா, மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.