/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குளத்தில் குளிக்க சென்ற வாலிபர்கள் உயிரிழப்பு
/
குளத்தில் குளிக்க சென்ற வாலிபர்கள் உயிரிழப்பு
ADDED : ஜன 18, 2024 01:33 AM

நகரி:சித்துார் மாவட்டம் நகரி புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 32. திருத்தணி ஒன்றியம் மத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் உமாகாந்த், 28. இருவரும் நெசவு தொழில் செய்து வந்தனர்.
நேற்று முன்தினம் மாட்டு பொங்கலை ஒட்டி கார்த்திக், உமாகாந்த் ஆகிய இருவரும், நகரி அடுத்த தடுக்குப்பேட்டை பகுதியில் உள்ள சலபல கோணையில் உள்ள தாமரை குளத்தில் குளிக்க சென்றனர். அப்போது, இருவரும் குளத்தில் இறங்கி குளித்த போது, தண்ணீரில் மூழ்கினர். அங்கு குளித்துக் கொண்டிருந்த சிலர் இருவரையும் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நகரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி, சேற்றில் சிக்கி இறந்த கார்த்திக், உமாகாந்த் ஆகிய இருவரின் உடலை மீட்டனர்.
இதுகுறித்து நகரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.