/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய கோவில் சாலைகளால் அவதி
/
'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய கோவில் சாலைகளால் அவதி
ADDED : மே 04, 2025 02:05 AM

திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இங்கு, வாரந்தோறும் சனிக்கிழமை மாந்தீஸ்வரர் பரிகார பூஜை நடப்பது வழக்கம். அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூஜையில் பங்கேற்பர். பெரும்பாலானோர் வெளியூர்களில் இருந்து கார் வாயிலாக வந்து பூஜையில் பங்கேற்கின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்கள், தங்கள் வாகனங்களை கோவில் எதிரே உள்ள சன்னிதி தெரு மற்றும் வடக்கு மாட வீதி, தெற்கு மாட வீதிகளில் நிறுத்தி செல்கின்றனர். இதனால், இருசக்கர வாகனத்தில் வரும் பக்தர்கள் மற்றும் நடந்து செல்லும் பக்தர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, திருத்தணி முருகன் கோவில் அதிகாரிகள் வாகனங்கள் நிறுத்த, ‛பார்க்கிங்' வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.