/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சேதமான தரைப்பாலம் தற்காலிக சீரமைப்பு
/
சேதமான தரைப்பாலம் தற்காலிக சீரமைப்பு
ADDED : பிப் 15, 2024 11:47 PM

கடம்பத்துார்:திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சத்தரை ஊராட்சி. இப்பகுதியில் சத்தரை கண்டிகை வழியாக கொண்டஞ்சேரி செல்லும் நெடுஞ்சாலையில் கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.
இந்த பாலத்தை பயன்படுத்தி, 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் கொண்டஞ்சேரி, மப்பேடு வழியாக சுங்குவார்சத்திரம், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார், தண்டலம், அரக்கோணம் சென்று வருகின்றனர். மேலும் இந்த வழியாக தினமும் 5,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்களும் சென்று வருகின்றன.
இந்த தரைப்பாலம் கடந்த 2016, 2021, 2022 என மூன்று முறை சேதமடைந்து சீரமைக்கப்பட்டது. மூன்று முறை தரைப்பாலம் சேதமடைந்தும் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில் இந்த தரைப்பாலம் கடந்த 2023ல் நான்காவது முறையாக சேதமடைந்தது.
இதனால் இவ்வழியே அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
பொதுமக்களின் வேண்டுகோள்படி தற்போது சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க பணிகள் துவங்கியுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.