/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நீர்வரத்து கால்வாய் சீரமைக்காததால் வறண்ட தலையாறிதாங்கல் ஏரி
/
நீர்வரத்து கால்வாய் சீரமைக்காததால் வறண்ட தலையாறிதாங்கல் ஏரி
நீர்வரத்து கால்வாய் சீரமைக்காததால் வறண்ட தலையாறிதாங்கல் ஏரி
நீர்வரத்து கால்வாய் சீரமைக்காததால் வறண்ட தலையாறிதாங்கல் ஏரி
ADDED : டிச 05, 2024 11:26 PM

திருத்தணி, திருத்தணி ஒன்றியம், தலையாறிதாங்கல் ஏரி, 60க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியின் நீர் பாசனத்தால், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிரிடுகின்றனர்.
செருக்கனுார் சித்தேரி நிரம்பி வழியும் உபரிநீர், நீர்வரத்து கால்வாய் வழியாக தலையாறிதாங்கல் ஏரிக்கு வருகிறது.
இந்நிலையில், நீர்வரத்து கால்வாயை ஒன்றிய நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாய் முழுதும் முட்செடிகள் வளர்ந்தும் ஆங்காங்கே கால்வாய் புதைந்தும் உள்ளது. 'பெஞ்சல்' புயலால் திருத்தணி ஒன்றியத்தில், 32 ஏரிகளில் இரண்டு ஏரிகள் நிரம்பியும், மீதமுள்ள ஏரிகளில், 50 சதவீதத்திற்கு மேலாகவும் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆனால், தலையாறிதாங்கல் ஏரியில் பள்ளத்தில் மட்டுமே மழைநீர் தேங்கியுள்ளது.
இதற்கு காரணம், நீர்வரத்து கால்வாயை சீரமைக்காததால் தான் ஏரிக்கு தண்ணீர் வரவில்லை என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, இனியாவது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, நீர்வரத்து கால்வாயை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.