/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அம்மன் கோவிலில் தாலி சரடு திருட்டு
/
அம்மன் கோவிலில் தாலி சரடு திருட்டு
ADDED : ஜன 31, 2025 02:43 AM
பொதட்டூர்பேட்டை : பொதட்டூர்பேட்டை அடுத்த நொச்சிலி கிராமத்தில், கங்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடசுப்பையா, 53, என்பவர், பூசாரியாக இருந்து வருகிறார்.
இவர், நேற்று மாலை கோவிலுக்கு சென்ற போது, கோவில் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, உண்டியல் உடைக்கப்பட்டு, பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.
அம்மனின் கழுத்தில் இருந்த நான்கு கிராம் தாலிச்சரடும் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து, பொதட்டூர்பேட்டை போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், கோவிலில் பொருத்தப்பட்டுள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை பார்த்த போது, 'ஹோண்டா டியோ' இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர், கொள்ளையில் ஈடுபட்டதுதெரியவந்துள்ளது.