/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேர்தல் அறிவிப்புக்கு முன்பே ஆந்திர போலீசார் தீவிர சோதனை
/
தேர்தல் அறிவிப்புக்கு முன்பே ஆந்திர போலீசார் தீவிர சோதனை
தேர்தல் அறிவிப்புக்கு முன்பே ஆந்திர போலீசார் தீவிர சோதனை
தேர்தல் அறிவிப்புக்கு முன்பே ஆந்திர போலீசார் தீவிர சோதனை
ADDED : ஜன 20, 2024 12:35 AM

கும்மிடிப்பூண்டி:விரைவில் 2024 லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதனுடன், அண்டை மாநிலமான ஆந்திராவில் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. ஆந்திர மாநிலத்தில், 25 லோக்சபா மற்றும் 175 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும்.
அப்போது, தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீசார் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்வர். குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், ஆந்திர மாநில அரசு முன்கூட்டியே தயாராகி வருகிறது. ஆந்திர மாநில எல்லையோர சோதனைச்சாவடிகளில், போலீசார் முகாமிட்டு வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பதி எஸ்.பி., பரமேஸ்வர் ரெட்டி உத்தரவுபடி சென்னை- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை கும்மிடிப்பூண்டி அடுத்த தடா பகுதியில், சாலையின் குறுக்கே ஆந்திர மாநில போலீசார் 'பேரிகாட்' வைத்து அடைத்துள்ளனர். அதில், பொது தேர்தல்கள் 2024க்கான மாநில எல்லையோர சோதனைச்சாவடி என அறிவிப்பு செய்துள்ளனர்.
இதனால் வாகனங்கள் அனைத்தும் இணைப்பு சாலை வழியாக செல்கின்றன. போலீசார், ஆந்திராவுக்குள் வரும் வாகனங்களையும், ஆந்திராவில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களையும் சோதனையிட்டு வருகின்றனர்.