/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பியது
/
பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பியது
ADDED : அக் 25, 2025 11:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை: ஆரணி ஆற்றின் நடுவே கட்டப்பட்ட பாலேஸ்வரம் அணை நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகிறது.
பெரியபாளையம் அருகே, ஆரணி ஆற்றின் நடுவே பாலேஸ்வரம் அணை உள்ளது. கடந்த 2009ல் 7.44 கோடி ரூபாயில் கட்டப்பட்ட இந்த அணைக்கட்டில், நான்கு மதகுகள் உள்ளன.
இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீரால், சுற்றியுள்ள, 5,000 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெற்று வருகின்றன.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, பலத்த மழை பெய்து வருகிறது. ஆரணி ஆற்றின் நடுவே கட்டப்பட்ட சுருட்டப்பள்ளி, சிட்ரபாக்கம் அணைக்கட்டு நிரம்பிய நிலையில், பாலேஸ்வரம் அணைக்கட்டும் நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது.

