/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குண்டும் குழியுமான சுந்தரசோழபுரம் சாலை
/
குண்டும் குழியுமான சுந்தரசோழபுரம் சாலை
ADDED : ஏப் 28, 2025 02:45 AM

திருவேற்காடு:திருவேற்காடு, சுந்தரசோழபுரம் பிரதான சாலை 2 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலை ஒட்டி, அரசு, தனியார் பள்ளிகள், சிறு குறு வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. ஆவடியில் இருந்து திருவேற்காடு சிவன் கோவில் மற்றும் கருமாரி அம்மன் கோவில் செல்வோர், இந்த சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் புனரமைக்கப்பட்ட இந்த சாலை, தற்போது குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
புது சாலை அமைக்காமல், அடிக்கடி கட்டட கழிவு கொட்டி சமன் செய்யப்பட்டு வருகிறது. இதனால், சாலையில் புழுதிமண்டலம் ஏற்பட்டு பகுதிவாசிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

