/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் மைதானத்தில் குளமாக தேங்கிய மழைநீர் தண்ணீரை அகற்றிய பின் முதல்வர் கோப்பை போட்டி

ADDED : செப் 25, 2024 01:00 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குளம் போல் தேங்கிய மழைநீரை அகற்றிய பின், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நடந்தது.
திருவள்ளூர் மாவட்ட அளவிலான, முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி, கடந்த, 10ல் துவங்கியது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர் மற்றும் பொது என நான்கு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.
பல்வேறு இடங்களில், தடகளம், கேரம், இறகு, மேசை பந்து, கிரிக்கெட், நீச்சல், கூடைப்பந்து, கால்பந்து, வாலிபால், டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியின் கடைசி நாளான நேற்று, திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், பொதுப்பிரிவினருக்கு கால்பந்து, கபடி மற்றும் வாலிபால் போட்டி நடந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் போட்டி நடைபெறும் மைதானத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. இதையடுத்து, விளையாட்டு மைதான ஊழியர்கள், நேற்று காலை முதல் போட்டி துவங்கும் நிமிடம் வரை, மைதானத்தில் தேங்கிய தண்ணீரை அகற்றினர். பின், போட்டி நடைபெறும் இடத்தில், 'எம் சாண்ட்' மண் போட்டு, நிரப்பினர். அதன் பின், போட்டி துவங்கியது. இப்போட்டியில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து விளையாட்டு வீரர்கள் கூறுகையில், 'மாவட்ட விளையாட்டு மைதானத்தை, மழை காலத்தில் தண்ணீர் தேங்காமல் முறையாக பராமரிக்க வேண்டும். தண்ணீர் வரும் வழியை அடைத்து, மைதானத்தை பாதுகாத்தால், இந்த மைதானம் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்றதாக அமையும். மாநில விளையாட்டு துறை உரிய நிதி ஒதுக்கி, மைதானத்தை சீரமைக்க வேண்டும்' என்றனர்.