/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அடிப்படை வசதி குறித்து கேட்டறிந்த கலெக்டர்
/
அடிப்படை வசதி குறித்து கேட்டறிந்த கலெக்டர்
ADDED : ஜன 22, 2025 08:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில், 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், கலெக்டர் பிரபு சங்கர் நேற்று பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
அம்மையார்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அதை தொடர்ந்து, அம்மையார்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் புதிய வகுப்பறை கட்டட பணிகளையும் நேரில் பார்வையிட்டார்.
பின், ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பகுதிவாசிகளிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

