/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மேய்க்கால் புறம்போக்கு நிலம் மீட்க கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
/
மேய்க்கால் புறம்போக்கு நிலம் மீட்க கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
மேய்க்கால் புறம்போக்கு நிலம் மீட்க கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
மேய்க்கால் புறம்போக்கு நிலம் மீட்க கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
ADDED : ஏப் 21, 2025 11:50 PM

திருவள்ளூர், மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தி, ஊத்துக்கோட்டை அடுத்த அக்கரம்பாக்கம் கிராமத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஊத்துக்கோட்டை வட்டம், அக்கரம்பாக்கம் கிராமத்தினர், நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின், கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
அக்கரம்பாக்கம் கிராமத்தில் மேய்க்கால் புறம்போக்கு நிலம் 27 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த இடத்தில், கிராமவாசிகள் வளர்க்கும் கால்நடைகளை மேய்த்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த கிராமத்தில் சிலர், 7.88 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, பட்டா பதிவு செய்துள்ளனர்.
மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை, தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என, அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதை மீறி சிலர் பத்திரப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு இந்த பத்திரப்பதிவு நடந்துள்ளது.
இதுகுறித்து, பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, முறைகேடாக பதிவு செய்யப்பட்ட அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை, கலெக்டர் விசாரணை நடத்தி, முறைகேடாக பத்திரப்பதிவு செய்தோர் மீது நடவடிக்கை எடுத்து, அரசு நிலத்தை மீட்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.