/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டு மனை பட்டா கேட்டு இருளர் மக்கள் கோரிக்கை
/
வீட்டு மனை பட்டா கேட்டு இருளர் மக்கள் கோரிக்கை
ADDED : நவ 12, 2024 07:31 AM
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, லட்சிவாக்கம் ஊராட்சியில் உள்ளது இருளர் காலனி. இங்கு, 35 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும்இப்பகுதியில் அனைவரும்குடிசை போட்டு வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் முக்கிய தொழில் கூலி வேலைக்கு செல்வது. போதுமான அளவு வருமானம் இன்றி இப்பகுதியில் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். தாங்கள் வாழும் குடிசையை புதுப்பிக்க முடியாத நிலையில் உள்ள இவர்கள்,மழைக்காலங்களில் தண்ணீர் கசிவதை தடுக்க பிளாஸ்டிக் கொண்டு மூடி உள்ளனர்.
இவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்தும் எவ்வித பலனும் இல்லை என, இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பட்டா இல்லாததால், அரசின் உதவி பெற்று வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர்நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைஎழுந்துள்ளது.