/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயன்பாடின்றி பாழாகும் கூட்டுறவு வங்கி கட்டடம்
/
பயன்பாடின்றி பாழாகும் கூட்டுறவு வங்கி கட்டடம்
ADDED : அக் 31, 2025 12:12 AM

ஆர்.கே.பேட்டை:  பயன்பாடில்லாமல் பாழாகும் கூட்டுறவு வங்கி கட்டடத்தை சீரமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வந்தது. நிர்வாக குளறுபடியால் கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது.
இதனால், அந்த கட்டடம் பயனின்றி வீணாக பூட்டிக்கிடக்கிறது. பூட்டிக்கிடக்கும் இந்த கட்டடத்தின் சுவரில் கடந்த, 15 ஆண்டுகளாக ஒரு ஆலமரம் வளர்ந்து வருகிறது. கட்டடத்தின் சுவரிலேயே வேரூன்றி வளர்ந்து வரும் இந்த மரம், 30 அடி உயரத்தில் பரந்து விரிந்து காணப்படுகிறது.
இந்த மரத்தின் நிழலில் பகல் நேரத்தில் மதுபிரியர்கள் மது அருந்தி வருகின்றனர். இதனால் இங்கு செயல்பட்டு வந்த வி.ஏ.ஓ., அலுவலகமும் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பயனின்றி கிடக்கும் வேளாண் கூட்டுறவு சங்க கட்டடத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவும், கட்டடத்தை வலுவிழக்க செய்யும் விதமாக வளர்ந்துள்ள ஆலமரத்தை வெட்டி அகற்றவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

