/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாயமாகி வரும் மழைநீர் கால்வாய் நீர்வள துறை அதிகாரிகள் பாராமுகம்
/
மாயமாகி வரும் மழைநீர் கால்வாய் நீர்வள துறை அதிகாரிகள் பாராமுகம்
மாயமாகி வரும் மழைநீர் கால்வாய் நீர்வள துறை அதிகாரிகள் பாராமுகம்
மாயமாகி வரும் மழைநீர் கால்வாய் நீர்வள துறை அதிகாரிகள் பாராமுகம்
ADDED : ஆக 31, 2025 11:55 PM

பொன்னேரி,:கொசஸ்தலை ஆற்றிற்கு மழைநீர் செல்லும் கால்வாய் முழுதும் செடிகள் வளர்ந்து, பராமரிப்பு இன்றி உள்ளது.
சோழவரம் அடுத்த செக்கஞ்சேரி, நெற்குன்றம், அட்டபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து வெளியேறும் மழைநீர், அங்குள்ள கால்வாய் வழியாக கொசஸ்தலை ஆற்றிற்கு செல்கிறது. இந்த கால்வாய் பராமரிப்பு இன்றி உள்ளது.
கால்வாயின் கரைகள் சேதமடைந்தும், மரங்கள் வளர்ந்தும் உள்ளன. செக்கஞ்சேரி கிராமத்தில் கரைகள் கரைந்து, அருகில் உள்ள குடியிருப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
கால்வாய் பராமரிப்பு இன்றி இருப்பதால், மழைக்காலங்களில் கொசஸ்தலை ஆற்றிற்கு மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மூன்று ஆண்டுகளாக இதே நிலை இருப்பதால், கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இது தொடர்பாக, நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பருவமழைக்கு முன், கால்வாயை சீரமைக்க நீர்வளத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.