sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாவட்டம் முழுதும் இலவச விளம்பர பலகைகளாகும்... அரசு கட்டடங்கள்:கட்சிகளின் விதிமீறலை கண்டிக்காமல் காவல் துறை வேடிக்கை

/

மாவட்டம் முழுதும் இலவச விளம்பர பலகைகளாகும்... அரசு கட்டடங்கள்:கட்சிகளின் விதிமீறலை கண்டிக்காமல் காவல் துறை வேடிக்கை

மாவட்டம் முழுதும் இலவச விளம்பர பலகைகளாகும்... அரசு கட்டடங்கள்:கட்சிகளின் விதிமீறலை கண்டிக்காமல் காவல் துறை வேடிக்கை

மாவட்டம் முழுதும் இலவச விளம்பர பலகைகளாகும்... அரசு கட்டடங்கள்:கட்சிகளின் விதிமீறலை கண்டிக்காமல் காவல் துறை வேடிக்கை


ADDED : நவ 24, 2025 04:03 AM

Google News

ADDED : நவ 24, 2025 04:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:அரசு கட்டட சுற்றுச்சுவர்களை சீரழிக்கும் வகையில், அரசியல் கட்சியினர் விளம்பரங்கள் எழுதுவது அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக, காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காடு, மீஞ்சூர், கடம்பத்தூர் ஆர்.கே.பேட்டை, கடம்பத்தூர் உட்பட 14 ஒன்றியங்கள் உள்ளன. இப்பகுதிகளுக்கு உட்பட்டு அரசு அலுவலகங்கள், உயர்மட்ட பாலங்கள், பேருந்து நிலையங்கள் என, அரசுக்கு சொந்தமான கட்டடங்கள் உள்ளன.

இந்த அரசு கட்டடங்கள், பாலம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில், அரசியல் கட்சியினர், தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்து, கட்டடங்களின் சுவர்களில் விளம்பரங்களை எழுதி வருகின்றனர்.

தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் (சிதைவைத் தடுக்கும்) சட்டத்தின்படி, சாலையோர இடங்கள், தனியார், அரசு கட்டட சுற்றுச்சுவர்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், பேருந்து நிலையம், மேம்பாலங்கள், துாண்கள் ஆகியவற்றில் விளம்பரம் எழுதுவது, சுவரொட்டி மற்றும் பேனர்கள் வைப்பதை தடை செய்கிறது.

இதை மீறினால், ஓராண்டு சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கக்கூடும். இச்சட்டத்தை அமல்படுத்துவது, உள்ளூர் போலீசாரின் கடமை. ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தில், இந்த நடைமுறையை காவல் துறையோ, உள்ளாட்சி அமைப்புகளோ பின்பற்றுவதே இல்லை.

திருவாலங்காடு ஒன்றியத்தில் பி.டி.ஓ., அலுவலக சுற்றுச்சுவர், அங்கன்வாடி மையம், புள்ளியியல் துறை அலுவலகம், பயணியர் நிழற்குடை என, அரசு கட்டங்களின் சுற்றுச்சுவர்களில், அரசியல் கட்சியினர் தங்கள் விளம்பரங்களை எழுதி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் இதே நிலை தான் தொடர்கிறது.

வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், மேலும், சுவர் விளம்பரங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்கிறது சென்னை உயர் நீதிமன்றம், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதித்துள்ளது. ஆனால், அதை மீறி பேனர்கள் வைப்பது அதிகரித்துள்ளது. பொது இடங்களில் சட்டவிரோதமாக விளம் பர பேனர்கள் வைப்பதை தடுக்க வேண்டும். விதிமீறி விளம்பர பேனர்கள் வைப்பவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஆர்.பார்த்தசாரதி, திருவாலங்காடு.


நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம்
அரசு அலுவலகங்கள், மேம்பாலம் உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான இடங்களில், பெரும்பாலும் கட்சியினர் தான் சுவர் விளம்பரங்களை எழுதுகின்றனர். அவர்களை எதிர்த்து புகார் தர அரசு அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் தயங்குகின்றனர். மாறாக, சுவர் விளம்பரம் எழுதுவோரிடம் காவல் துறையினர் கேட்டால், அப்போது எழுதாமல் விட்டு விட்டு, இரவு நேரங்களில் எழுதி செல்கின்றனர். மேலும் சிலர், புகார் உள்ளதா என கேள்வி எழுப்புகின்றனர். மாவட்ட, வட்ட நிர்வாகிகள், விளம்பரம் எழுதுவோருக்கு ஆதரவாக எங்களிடம் பேசுகின்றனர். இதனால், காவல் துறையினரும் நடவடிக்கை எடுக்க தயக்கம் காண்பிக்கின்றனர். காவல் துறை அதிகாரி, திருவள்ளூர்.








      Dinamalar
      Follow us