ADDED : நவ 14, 2024 09:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அருகே, திருக்கண்டலம் ஊராட்சி, மடவிளாகம் கிராமம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன், 48. இவரது மகள் சபீதா, 24. கடந்த, மூன்று மாதங்களுக்கு முன் மயக்கம், தலைவலி ஏற்பட்டது.
சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு சபீதாவிற்கு மீண்டும் மயக்கம், தலைவலி ஏற்பட்டது. கை, கால்கள் இழுத்தபடி இருந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து முருகேசன், பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.