/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீன்பிடிக்க சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து மாயம்
/
மீன்பிடிக்க சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து மாயம்
மீன்பிடிக்க சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து மாயம்
மீன்பிடிக்க சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து மாயம்
ADDED : மே 31, 2024 04:59 PM
பழவேற்காடு: பழவேற்காடு, திருமலைநகர் மீனவபகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் பிரேம்குமார், 34, மீனவர். இவர் இன்று அதிகாலை கடலில் மீன்பிடிப்பதற்காக தந்தை சீனிவாசன் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த சுரேஷ் ஆகியோருடன் படகில் சென்றார்.
முகத்துவாரம் வழியாக செல்லும்போது, திடீரென ஏற்பட்ட ராட்சத அலையால் படகில் இருந்து நிலை தடுமாறி பிரேம்குமார் கடலில் விழுந்தார்.
தகவல் அறிந்த சக மீனவர்கள் அங்கு விரைந்தனர். கடல் நீரில் மூழ்கி மாயமான பிரேம்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்றுமாலை வரை, 15பைபர் படகுகளில் தேடுதல் பணிகளில் ஈடுபட்டும், பிரேம்குமார் கிடைக்கவில்லை.
தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. திருப்பாலைவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.