/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முகூர்த்த நேரத்தில் மணமகன் ஓட்டம் தந்தை, மாமாவுக்கு காப்பு
/
முகூர்த்த நேரத்தில் மணமகன் ஓட்டம் தந்தை, மாமாவுக்கு காப்பு
முகூர்த்த நேரத்தில் மணமகன் ஓட்டம் தந்தை, மாமாவுக்கு காப்பு
முகூர்த்த நேரத்தில் மணமகன் ஓட்டம் தந்தை, மாமாவுக்கு காப்பு
ADDED : டிச 07, 2024 09:24 PM
திருத்தணி:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 29; இவர், பெங்களூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வேலை செய்து வருகிறார். அதே வங்கியில், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த அனுஷா, 29, என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இவர்கள், நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன், கடந்த செப்.15ம் தேதி, காலை 6 --- 7:30 மணிக்கு திருமண முகூர்த்தம் நடைபெற இருந்த நிலையில், அதிகாலை மணமகன் ஸ்ரீதர் திடீரென மாயமானார்.
அதை தொடர்ந்து மணமகனை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் திருமணம் நின்றது. இதையடுத்து, மணமகள் அனுஷா திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரில், பெற்றோரின் தூண்டுதலின் பேரில் தான் ஸ்ரீதர் தப்பியோடியதாக கூறப்பட்டிருந்தது. புகாரின்படி, ஸ்ரீதரின் தந்தை கோவிந்தசாமி, 73, அவரது மாமா சரவணன், 38 மற்றும் 2 சகோதரிகள் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று, கோவிந்தசாமி, சரவணன் ஆகிய இருவரையும் இன்ஸ்பெக்டர் மதியரசன் கைது செய்தார்.