ADDED : அக் 20, 2024 01:05 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்திற்க்கு உட்பட்டது கூளூர் கிராமம். இங்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த 2020 - ---2021ம் ஆண்டு பொது நிதியில் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டடம் பழுது நீக்கப்பட்டது. 3 ஆண்டுகள் ஆன நிலையிலும், பயன்பாட்டுக்கு வராமல், புதர்மண்டிய நிலையில் பயன்பாட்டின்றி பூட்டி கிடக்கிறது.
இதனால் அப்பகுதி பெண்கள் இயற்கை உபாதைகளுக்கு திறந்தவெளியை பயன்படுத்தும் அவலம் தொடர்கிறது.
கிராமங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து சுகாதார வளாகங்களை கட்டிக்கொடுக்கும் நிலையில், பல ஊராட்சிகளில் இதுபோன்று சுகாதார வளாகங்கள் பயன்பாடின்றி உள்ளது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.