ADDED : ஜன 11, 2025 02:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னமண்டலி ஊராட்சியில் அரசு பள்ளி அருகே அமைந்துள்ளது கிளை நூலகம். 100க்கும் மேற்பட்ட வாசகர் உள்ளனர். இந்த நூலகம் பழுதடைந்த நிலையில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 2022 -- 23ம் ஆண்டு, 1 லட்சத்து, 18,000 ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. கட்டடம் சீரமைக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேல் ஆன நிலையில் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை.
இதனால் கட்டடம் பயன்பாட்டுக்கு வராமலே பாழாகும் நிலை உள்ளது. மேலும், இந்த நூலக வளாகத்தை அப்பகுதிவாசிகள் மாட்டு தொழுவமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நூலக கட்டடத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.