ADDED : ஜன 18, 2024 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி அடுத்த மேல்திருத்தணி அமிர்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் மனைவி செவ்வந்தி, 23. இவர் வீட்டின் அருகே வசித்து வரும் குரு, 22, என்பவர் வீட்டில் 'ஹோம் தியேட்டரில்' அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, செவ்வந்தி மற்றும் அவரது கணவர் இருவரும், குருவிடம் பாட்டு சத்தத்தை குறைக்க சொல்லி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த குரு, செவ்வந்தியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செவ்வந்தி கொடுத்த புகாரின்படி, திருத்தணி போலீசார் குருவை கைது செய்தனர்.

