/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்வாய் சீரமைப்பு பணி துவக்கம் மழைக்கு முன் நகராட்சி 'சுறுசுறு'
/
கால்வாய் சீரமைப்பு பணி துவக்கம் மழைக்கு முன் நகராட்சி 'சுறுசுறு'
கால்வாய் சீரமைப்பு பணி துவக்கம் மழைக்கு முன் நகராட்சி 'சுறுசுறு'
கால்வாய் சீரமைப்பு பணி துவக்கம் மழைக்கு முன் நகராட்சி 'சுறுசுறு'
ADDED : செப் 28, 2024 01:37 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில், 65,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, தினமும் மட்கும் மற்றும் மட்காத குப்பை என, 45,000 டன் குவிகிறது. இதை அகற்ற, நகராட்சி மற்றும் தனியார் ஊழியர்கள், 180க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், எதிர்வரும் பருவமழையை கருத்தில் கொண்டு, நகராட்சி பகுதிகளில் உள்ள தெருக்கள், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளை, ஒட்டுமொத்த ஊழியர்கள் கொண்டு சுத்தப்படுத்தும் பணி துவக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் திருநாவுக்கரசு, சுகாதார அலுவலர் மோகன் கூறியதாவது:
வீடுகள்தோறும் சேகரமாகும் குப்பையை தனியார் ஊழியர்கள் நேரடியாக சென்று சேகரித்து வருகின்றனர். நகராட்சியில் வசிப்போர் சிலர், தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பையை துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்காமல், தெருக்களில் வீசி வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
மேலும், பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில், மழைநீர் கால்வாயில் குப்பையை கொட்டுவதால் அடைப்பு ஏற்படுகிறது. இதனால், மழைக்காலத்தில் தண்ணீர் வெளியேறாமல் குடியிருப்பு பகுதியில் தேங்குகிறது.
இதுகுறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பருவமழை காலத்திற்குள் அனைத்து மழைநீர் கால்வாய் மற்றும் நகர பகுதிகளை சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இம்மாத இறுதிக்குள் பணி நிறைவடைந்து, வரும் மழைக்காலத்தில் நகர பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.