/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பகையை தீர்க்க நடந்த கொலை விசேஷத்தில் கூடியவர்கள் வெறிச்செயல்
/
பகையை தீர்க்க நடந்த கொலை விசேஷத்தில் கூடியவர்கள் வெறிச்செயல்
பகையை தீர்க்க நடந்த கொலை விசேஷத்தில் கூடியவர்கள் வெறிச்செயல்
பகையை தீர்க்க நடந்த கொலை விசேஷத்தில் கூடியவர்கள் வெறிச்செயல்
ADDED : ஆக 01, 2025 10:19 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே விஷேசத்தில் ஒன்று கூடிய ஆறு பேர், இரண்டு ஆண்டு பகையை தீர்க்க, வாலிபரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே, அரும்பாக்கம் கிராமத்தில் வசித்தவர் முருகன், 26. நேற்று முன்தினம் மாலை, அரும்பாக்கம் ஏரிக்கரை பகுதியில், மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த சங்கர், 23, கார்த்திக், 21, சாரதி, 20, பெரிய ஓபுளாபுரம் மணிகண்டன் என்ற பொட்டுமணி, 27, ஆந்திர மாநிலம் பெரியவேட்டு கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி, 19, ராஜேஷ், 20, ஆகிய ஆறு பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணையில் தெரியவந்ததாவது:
இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஆந்திர மாநிலம் பீமுவார்பாளையம் கிராம படகுத்துறையில், மர்ம கும்பல் ஒன்று தற்போது கைதாகி உள்ள சங்கரை கத்தியால் வெட்டியது. அந்த கும்பலை சேர்ந்தவர் முருகன் எனக் கூறப்படுகிறது. அதன்பின், மது கடையில் இரு தரப்பிடையே தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம், சங்கர் உறவினர் காது குத்து விழாவில், ஆறு பேரும் வந்திருந்தனர். போதையில் இருந்த ஆறு பேரும், சங்கரின் பழைய பகைக்கு தீர்வு காண வேண்டும் என முடிவு எடுத்தனர்.
அரும்பாக்கம் ஏரிக்கரை பகுதியில், முருகன் இருப்பதை தெரிந்து, அங்கு சென்ற கும்பல், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி சென்றது. இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது.
ஆரம்பாக்கம் போலீசார், இதற்காக ஆறு பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.