/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாயமானவர் துாக்கில் தொங்கியபடி உயிரிழப்பு
/
மாயமானவர் துாக்கில் தொங்கியபடி உயிரிழப்பு
ADDED : டிச 23, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கடந்த மாதம் மாயமான நபர், அழுகிய நிலையில் துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி, பாலயோகி நகரில் வசித்தவர் சிவரஞ்சன், 44. கடந்த மாதம் 22ம் தேதி மாயமானார்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர்.
இந்நிலையில், புதுகும்மிடிப்பூண்டி எல்லையம்மன் கோவி ல் பின்புறம் உள்ள ஏரி அருகே அழுகிய நிலையில் துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.
உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

