/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் எஸ்.ஐ.ஆர்., படிவத்தில் இறந்தோர் எண்ணிக்கை அதிகம்
/
திருவள்ளூரில் எஸ்.ஐ.ஆர்., படிவத்தில் இறந்தோர் எண்ணிக்கை அதிகம்
திருவள்ளூரில் எஸ்.ஐ.ஆர்., படிவத்தில் இறந்தோர் எண்ணிக்கை அதிகம்
திருவள்ளூரில் எஸ்.ஐ.ஆர்., படிவத்தில் இறந்தோர் எண்ணிக்கை அதிகம்
ADDED : டிச 12, 2025 06:39 AM
திருவள்ளூர்: ''திரும்ப பெறப்பட்ட எஸ்.ஐ.ஆர்., படிவத்தில், இறந்தோர், இரட்டை பதிவுகள் அதிகம் உள்ளது,'' என, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில், 36 லட்சத்து, 82,226 வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த நவ., 4 முதல், நேற்று வரை, விண்ணப்ப படிவம் அளித்து, பூர்த்தி செய்து பெறப்பட்டது.
இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரதாப் கூறியாதவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் படிவம் அளிக்கப்பட்டு, ஓட்டுச் சாவடி நிலைய அலுவலர்களால் திரும்ப பெறப்பட்டுள்ளது. அவற்றை தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது.
திரும்ப பெறப்பட்ட படிவத்தில், பெரும்பாலானவை பூர்த்தி செய்து திரும்ப பெறப் பட்டுள்ளது.
சிலவற்றில், முகவரி மாற்றம், இறந்தவர்கள், இரட்டை பதிவு அதிகம் உள்ளது.
அவற்றை பரீசிலனை செய்து, வரும் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் போது, நீக்கப்பட்டவர்களின் விபரம் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

