/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேங்கிய குப்பையை எரித்து முன்கூட்டியே போகி கொண்டாடிய ஊராட்சி நிர்வாகம்
/
தேங்கிய குப்பையை எரித்து முன்கூட்டியே போகி கொண்டாடிய ஊராட்சி நிர்வாகம்
தேங்கிய குப்பையை எரித்து முன்கூட்டியே போகி கொண்டாடிய ஊராட்சி நிர்வாகம்
தேங்கிய குப்பையை எரித்து முன்கூட்டியே போகி கொண்டாடிய ஊராட்சி நிர்வாகம்
ADDED : ஜன 13, 2025 01:29 AM

பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில், 3,000க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை கழிவு, ஆங்காங்கே தெருக்களின்யோரங்களில் கொட்டி குவிக்கப்படுகின்றன.
இவற்றை கொட்டி கையாள்வதற்கு முறையான திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படாமல் இருக்கிறது. ஊராட்சி நிர்வாகத்தில் தினமும் இவற்றை சேகரித்து கொட்டுவதற்கு இடவசதி இல்லாத நிலையில், அவற்றை அவ்வப்போது குவியும் இடங்களிலேயே எரிக்கப்படுகிறது.
நேற்றும், திருவேங்கிடபுரம், சமுதாய கூடம் அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பை எரிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் கரும் புகைமூட்டம் ஏற்பட்டது. அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
வழக்கமாக போகி பண்டிகையின்போது, பொதுமக்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை எரிப்பர்.
இன்று, போகி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், நேற்றே, தடப்பெரும்பாக்கம் ஊராட்சி, குப்பை எரித்து ஒருநாள் முன்னதாகவே பண்டிகையை கொண்டாடியதாக குடியிருப்புவாசிகள் அதிருப்தியுடன் தெரிவித்தனர்.
தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் குப்பையை கொட்டி கையாள்வதற்கான திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.