/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பக்தோசித பெருமாள் பரிவேட்டை உற்சவம்
/
பக்தோசித பெருமாள் பரிவேட்டை உற்சவம்
ADDED : ஜன 15, 2025 11:44 PM

சோளிங்கர்,ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்ட பாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். யோக நரசிம்மரின் உற்சவமூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில், சோளிங்கர் நகரில் அமைந்துள்ளது.
பொங்கல் திருவிழாவை ஒட்டி, நேற்று முன்தினம் பக்தோசித பெருமாள், ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது. கோவில் முன் உள்ள நான்கு கால் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார்.
அதைத் தொடர்ந்து, நேற்று புதன்கிழமை, மேற்கு திசை பரிவேட்டைக்கு, கிளிக்கூண்டு பல்லக்கில் சுவாமி எழுந்தருளினார். இதில் சின்னநாக பூண்டி, கங்கம்மாபுரம், பாலாபுரம், திருக்காவிரி குளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மண்டகப் படிகளில் சுவாமி எழுந்தருளினார்.
அந்தந்த கிராமங்களை சேர்ந்த பக்தர்கள், சுவாமியை ஆரவாரத்துடன் கோவிந்தா கோஷம் எழுப்பி வரவேற்றனர்.
தொடர்ந்து அடுத்துள்ள கிராமம் வரை உடன் சென்று வழியனுப்பினர்.
தொலைதுார கிராமங்களில் உள்ள பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் விதமாகவும், சுவாமியை நேரில் தரிசிக்க இயலாதவர்களுக்கும், இந்த பரிவேட்டையின் போது கிராமங்களுக்கு சுவாமி எழுந்தருள்வது குறிப்பிடத்தக்கது.

