/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பல்லாங்குழியாக மாறிய சாலை கோளப்பன்சேரி மக்கள் அவதி
/
பல்லாங்குழியாக மாறிய சாலை கோளப்பன்சேரி மக்கள் அவதி
பல்லாங்குழியாக மாறிய சாலை கோளப்பன்சேரி மக்கள் அவதி
பல்லாங்குழியாக மாறிய சாலை கோளப்பன்சேரி மக்கள் அவதி
ADDED : நவ 11, 2025 10:18 PM

கோளப்பன்சேரி: பல்லாங்குழியாக மாறிய சாலையால், கோளப்பன்சேரி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பூந்தமல்லி ஒன்றியம் திருமழிசை அருகே கோளப்பன்சேரி அமைந்துள்ளது. இங்குள்ள தண்டுரை - அரியாத்தம்மன் வரை செல்லும் சாலை, கடந்த 2020 - 21ம் ஆண்டு 10 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்டது.
தற்போது இச்சாலை மிகவும் சேதமடைந்து, மோசமான நிலையில் உள்ளது. சேதமடைந்த இச்சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.
இதனால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி சிறு சிறு காயமடைந்து வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், பல்லாங்குழியாக மாறிய சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோளப்பன்சேரி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.