/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இரு வாரமாக எரியாத தெரு விளக்கு புட்லுார் ஊராட்சி மக்கள் அவதி
/
இரு வாரமாக எரியாத தெரு விளக்கு புட்லுார் ஊராட்சி மக்கள் அவதி
இரு வாரமாக எரியாத தெரு விளக்கு புட்லுார் ஊராட்சி மக்கள் அவதி
இரு வாரமாக எரியாத தெரு விளக்கு புட்லுார் ஊராட்சி மக்கள் அவதி
ADDED : ஏப் 26, 2025 09:35 PM
திருவள்ளூர்:புட்லுார் ஊராட்சியில் மின் விளக்கு பழுதாகி இரண்டு வாரமாகியும் சீரமைக்கவில்லை என, அப்பகுதியினர் புகார் அளித்துள்ளனர்.
புட்லுார் ஊராட்சி மக்கள் சார்பில், திருவள்ளூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அளித்துள்ள மனு:
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது புட்லுார் கிராம ஊராட்சியில் 1,500க்கும் மேற்பட்ட வீடுகளில், 4,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியில் உள்ள கதிரவன் நகர் 30 அடி சாலையில், தெருவிளக்கு பழுதடைந்து விட்டது. இதுகுறித்து, ஊராட்சி செயலரிடம் சென்று அலுவலக பதிவேட்டில் பதிவு செய்து இரண்டு வாரம் ஆகியும், இது வரை சரி செய்யப்படவில்லை.
ஊராட்சி தலைவர் இருந்த காலத்தில், மின் விளக்கு பிரச்னை ஏற்பட்டால், இரண்டு நாட்களிலேயே சரி செய்து விடுவது வழக்கம். ஆனால், அந்த வழக்கம் தற்போது தனி அலுவலர் வந்ததும் நடைபெறாமல் உள்ளது. நடவடிக்கை எடுத்து தெரு மின்விளக்கு பழுதை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.