ADDED : ஜன 01, 2025 09:42 PM
சோழவரம்:சோழவரம் அடுத்த, காரனோடை பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன், 42. இவர் மீது, சோழவரம் போலீசில், போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன. காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்து உள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம், 30ம் தேதி இரவு, காரனோடை பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்தபோது, ஐந்து பேர் கொண்ட கும்பல் இவரை சரிமாரியாக தாக்கிவிட்டு தப்பியது.
இதில் பலத்த காயம் அடைந்த அய்யப்பன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இசம்பவம் தொடர்பாக சோழவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொணடனர்.
முன்விரோதத்தில் தாக்குதல் சம்பவம் நடந்திருப்பது விசாரணையில் தெரிந்தது. இவ்வழக்கு தொடர்பாக நேற்று, காரனோடை பகுதியைச் சேர்ந்த முரளி, 24, என்பவரை, போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

