/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாலத்தில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் சிரமம்
/
பாலத்தில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் சிரமம்
ADDED : பிப் 17, 2024 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, சென்னை - - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி சந்திப்பில் மேம்பாலம் உள்ளது. அந்த மேம்பாலத்தில், துப்புரவு பணிகள் மேற்கொண்டு பல மாதங்கள் ஆகின்றன. அதனால், மேம்பாலம் முழுதும், சாலையின் ஓரம் மணல் குவியல் காணப்படுகிறது.
அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், தடுமாறும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள், பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். உடனடியாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம், அந்த மேம்பாலத்தில் மணல் குவியல்களை அப்புறப்படுத்தி, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.